» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அணையிலிருந்து அதிக நீர் எடுத்துக்கொள்ளுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்

திங்கள் 25, அக்டோபர் 2021 12:27:51 PM (IST)

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக தண்ணீரை எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன்கடிதம் எழுதியுள்ளார். 

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. விரைவில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2109 கன அடியாகவும், தண்ணீர் திறப்பு 1750 கன அடியாகவும் உள்ளது.  மழை தீவிரமடையும்பட்சத்தில் அணை மொத்த நீர்மட்டமான 142 அடியை எட்டலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக தண்ணீரை எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அணையை திறக்கும் முன், அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், ஷட்டர்களை திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே கேரள அரசிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பினராயி விஜயன் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory