» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடத்தப்பட்ட வீரரை விடுவிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : மாவோயிஸ்டுகள் அறிக்கை

புதன் 7, ஏப்ரல் 2021 5:22:08 PM (IST)

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட வீரரை விடுதலை செய்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். 

கடந்த 3ம் தேதி சனிக்கிழமை சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா எல்லையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த சுமார் 1500 பாதுகாப்பு படையினரை 400 மாவோயிஸ்டுகள் அடங்கிய கும்பல் சுற்றி வளைத்து தாக்கியது. இந்த தாக்குதலில் 22 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 31 பேர் காயமடைந்தனர்.

மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.இந்த தாக்குதலின் போது சி.ஆர்.பி.எஃப் கோப்ரா கமாண்டோ பிரிவை சேர்ந்த கான்ஸ்டபிள் ரகேஷ் சிங் மாஹாஸ் என்பவரை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றனர். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) புதன்கிழமை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ஏப்ரல் 3 ம் தேதி நடந்த என்கவுன்டரில் 24 பாதுகாப்புப் வீரர்கள் உயிர் இழந்தனர். 31 பாதுகாப்புப் வீரர்கள் காயமடைந்தனர். ஒரு வீரர் தங்கள் காவலில் இருக்கிறார். அவரை விடுதலை செய்ய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சிபிஐ (மாவோயிஸ்ட்) தெரிவித்துள்ளது.

மாவோயிஸ்டுகளின் தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழு வெளியிட்ட இந்த இரண்டு பக்க கடிதத்தில், மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக 2000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர், அதைத் தொடர்ந்து எதிர் தாக்குதல் கொடுக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், என்கவுண்டரில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். என்கவுண்டரில் கைப்பற்றப்பட்ட வீரரை விடுவிப்பதற்கு மாநில அரசு ஒரு மத்தியஸ்தரை அறிவிக்க வேண்டும். காவல்துறை வீரர்கள் தங்கள் எதிரிகள் அல்ல என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Thalir Products


Nalam PasumaiyagamThoothukudi Business Directory