» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உலகின் மிக தொன்மையான தமிழை சரியாக கற்க முடியவில்லை: பிரதமர் நரேந்திர மோடி உரை!!

ஞாயிறு 28, பிப்ரவரி 2021 5:54:52 PM (IST)

உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான தமிழை சரியாக கற்க முடியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி இன்றைய மனதின் குரல்  வானொலி நிகழ்ச்சியில் பேசினார்..

கோடை காலத்திற்காக மழைநீரை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும். மழை எப்பொழுது பெய்கிறதோ அப்பொழுது மழை நீரைச் சேகரிக்க வேண்டும். எங்கு மழை பெய்கிறதோ அங்கு மழை நீரைச் சேகரித்து சேமிக்க வேண்டும். இதற்கான அகில இந்தியத் திட்டம் தயாராகிறது. மத்திய ஜல சகதி அமைச்சகம் திட்டத்தை அமல் செய்யும் பொறுப்பை ஏற்று செயல்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி இன்றைய மனதின் குரல் (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில் அறிவித்தார். 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றது முதல், மனதின் குரல் (மன் கி பாத்) என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11:00 மணிக்கு இந்திய நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 74-வது முறையாக மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு  பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இன்று தேசிய அறிவியல் தினம். விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் எழுதிய ராமன் விளைவு கண்டுபிடிப்பிற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் இந்திய விஞ்ஞானிகளைப் பற்றி நிறையப் படித்து இந்திய அறிவியலின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சுயசார்பு இந்தியாவுக்கு அறிவியலின் பங்கு மிகவும் அதிகம் தேவை  சுயசார்பு இந்தியா திட்டம் என்பது வெறும் அரசின் கொள்கை மட்டுமல்ல, அது ஒரு தேசிய உணர்வு. என்றார் மோடி. பல ஆண்டுகளாக பிரதமராகவும், முதலமைச்சராகவும் இருந்த தங்களுக்கு எதையாவது இழந்து விட்டோம் என்ற எண்ணம் உள்ளதா என நேயர் ஒருவர் மன் கி பாத் உரையின் போது மோடியிடம் கேள்வி எழுப்பினார். உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று.

நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது.இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமது கனவுகளை நனவாக்க நாம் பிறரை சார்ந்து இருக்க வேண்டியது இல்லை. மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கவலையடைந்தவர்களாக இருக்க கூடாது, வீரமானவர்களாக இருக்க வேண்டும்.

நதிக்கரைகளில் பல நாகரீகங்கள் மேம்பட்டிருக்கின்றன. நமது கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதால் இது பற்றி விரிவாக நம்மிடத்திலே காணக் கிடைக்கின்றது. இந்த ஆண்டு ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற உள்ளது. மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோடை காலத்திற்காக மழைநீரை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும்.

நாட்டின் அநேக பகுதிகளில் மே - ஜூன் மாதங்களில் மழைக் காலம் தொடங்கி விடுகிறது. நாம் இப்போதிலிருந்தே அக்கம்பக்கத்தில் இருக்கும் நீர்நிலைகளை  தூய்மைப்படுத்தி மழைநீரை சேமிக்க வேண்டும். மழை நீர் சேகரிப்பை உத்வேகப்படுத்தும் நோக்கில் பிரச்சாரத் திட்டம் ஒன்றை ஜல்சக்தி அமைச்சகம் விரைவில் அறிவிக்கும். ஒரு காலத்தில் கிராமங்களில் ஏரிகள்-குளங்கள் ஆகியவற்றின் பராமரிப்பை அனைவரும் இணைந்தே செய்து வந்தார்கள். இப்போது இதனையொட்டிய ஒரு முயற்சி தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் நடந்து வருகிறது

கொரோனாவுக்கு எதிரான போரில், அஜாக்கிரதையுடன் இருக்க கூடாது” என்று பிரதமர் மோடி கூறினார். வாழைக் கழிவிலிருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருவதாக, மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Thalir Products


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory