» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி

செவ்வாய் 26, ஜனவரி 2021 9:50:25 PM (IST)மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையே டெல்லி வன்முறைக்கு காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் உச்சகட்டமாக குடியரசு தினமான செவ்வாயன்று விவசாயிகள் மாபெரும் ட்ராக்டர் பேரணி நடத்தினர். ஆனால் பேரணியானது டெல்லிக்குள் நுழைந்த பின்னர் பல இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசார் தாக்கப்பட்டதுடன் விவசாயி ஒருவரும் பலியானார்.

இந்நிலையில் விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே டெல்லி வன்முறைக்கு காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் அவர்கள் காட்டிய பாரபட்சமான அணுகுமுறையுமே டெல்லி வன்முறைக்கு காரணமாகும். எனவே விவசாயிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்த மத்திய அரசு உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam PasumaiyagamThalir ProductsThoothukudi Business Directory