» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் தடியடி - கண்ணீர் புகை குண்டு வீச்சு - பரபரப்பு!!

செவ்வாய் 26, ஜனவரி 2021 12:50:27 PM (IST)டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக குடியரசு நாளான இன்று டெல்லியில் விவசாயிகள் இணைந்து மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுக்கின்றனர். இதில் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 100 கிமீ தூரத்துக்கு பேரணியில் ஈடுபடுகின்றனர். 

குடியரசு தினத்தை முன்னிட்டு கட்டுப்பாடுகளுடன் போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்தனர். காலை 11.30 மணியளளவில் பேரணியைத் துவங்கவிருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்த நிலையில் இன்று காலை 8 மணிக்கே திக்ரி எல்லையில் போராட்டத்தைத் துவங்கினர். திக்ரி எல்லையில் போலீஸாரின் தடுப்புகளைத் தகர்த்துவிட்டு பேரணியைத் தொடங்கியதால் காவல்துறையினர் குவிந்தனர். 

பின்னர் சிங்கு எல்லையில் இருந்து டெல்லிக்குள் டிராக்டர்களுடன் விவசாயிகள் நுழைந்துள்ளனர். சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதிக்கு வந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

sankarJan 26, 2021 - 06:54:08 PM | Posted IP 162.1*****

you idiot.. dont publish wrong news

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Thalir Products


Black Forest CakesThoothukudi Business Directory