» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெற்ற மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே கொடூரம்!!
திங்கள் 25, ஜனவரி 2021 4:41:07 PM (IST)
ஆந்திராவில் தாங்கள் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இத்தம்பதியினர் மூடநம்பிக்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக வீட்டில் அற்புதங்கள் நடத்துவதாக இருவரும் கடந்த சில மாதங்களாக பூஜைகள் நடத்தி வந்திருக்கிறார்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு வீட்டில் பூஜைகள் செய்து கொண்டிந்தபோது, முதலில் சாய் திவ்யாவையும் பின்னர் அலெக்கியாவும் உடற்பயிற்சி செய்யும் டம்பல்ஸ் மூலம் அவரது பெற்றோர் அடித்துக் கொன்றுள்ளனர்.
பின்னர் மகள்களை பூஜை அறையில் நிர்வாணமாக கிடத்தி சிறப்பு பூஜை செய்திருக்கிறார்கள். வீட்டிலிருந்து வந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரிடம் புருஷோத்தம், பத்மஜா இருவரும், நாங்கள் சிறப்பு பூஜை நடத்தி வருகிறோம். எங்களது 2 மகள்களையும் நரபலி கொடுத்துள்ளோம். ஒருநாள் பொறுத்திருங்கள். 2 மகள்களும் மீண்டும் உயிர்த்தெழுந்து விடுவார்கள் என்று கூறி அதிரவைத்துள்ளார்கள்.
இது தொடர்பாக மதனப்பள்ளி டிஎஸ்பி ரவிமனோஹாரா கூறுகையில், அவர்கள் இருவருக்கும் மூடநம்பிக்கைகள் மீது அதீதமாக நம்பிக்கை இருந்தது. அமானுஷ்ய நடைமுறைகளில் ஈடுபட்டதாகக் கூறினார்கள். நரபலி கொடுத்ததை ஒப்புக்கொண்டனர். இன்னும் ஒரு நாளில் மகள்கள் உயிருடன் திரும்புவார்கள். மகள்களை மீண்டும் உயிருடன் வரவைக்க சில அமானுஷ்ய பூஜைகள் செய்ய வேண்டும். சிறிது நேரம் ஒதுக்குங்கள் என்று அவர்கள் எங்களிடம் கேட்டார்கள், "என்று டி.எஸ்.பி கூறி அதிரவைத்தார்.
இதனிடையே பூஜை அறையில் நிர்வாண நிலையில் கிடந்த 2 மகள்களின் சடலங்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். தொடர்ந்து, புருஷோத்தம், பத்மஜா இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:25:13 PM (IST)

ட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்: மம்தா பானர்ஜி
வியாழன் 25, பிப்ரவரி 2021 10:35:34 AM (IST)

திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி தங்க சங்கு- சக்கரம் : தமிழக பக்தர் காணிக்கையாக வழங்கினார்
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:49:52 AM (IST)

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்: குடியரசு தலைவர் திறந்து வைத்தார்
புதன் 24, பிப்ரவரி 2021 5:26:07 PM (IST)

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதன் 24, பிப்ரவரி 2021 4:59:08 PM (IST)

இந்திய டாக்டர்களின் தேவை உலகம் முழுவதும் அதிகரிக்கும் : பிரதமர் மோடி பெருமிதம்
புதன் 24, பிப்ரவரி 2021 8:42:54 AM (IST)
