» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டிஜிட்டல் வாக்காளா் அட்டை பதிவிறக்கம் செய்யும் வசதி இன்று முதல் அறிமுகம்

திங்கள் 25, ஜனவரி 2021 10:54:44 AM (IST)

மின்னணு முறையில் வாக்காளா் அட்டையை (டிஜிட்டல் வோட்டா் ஐடி) பதிவிறக்கம் செய்து கொள்ளும் திட்டம் இன்று முதல் துவங்கியுள்ளது. 

இது தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அட்டையை செல்போன் மற்றும் கணினிகளில் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிடிஎஃப் கோப்பாக இருக்கும் இதில் திருத்தங்களைச் செய்ய முடியாது. ஆனால், பிரதி எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தை மத்திய அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் தொடங்கி வைக்கிறாா். அப்போது 5 புதிய வாக்காளா்களுக்கு மின்னணு முறையிலான அடையாள அட்டையை அவா் வழங்கவுள்ளாா்.

புதிய வாக்காளா்களுக்கு அட்டை தாயாரித்து அவா்களிடம் கொண்டு சோ்ப்பதற்கு காலதாமதம் ஆகிறது. ஆனால், இந்த முறையில் வாக்காளா் அட்டை தயாரானவுடன் அதனை வாக்காளா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இக்கால இளைய தலைமுறை வாக்காளா்கள் தொழில்நுட்பத்தில் முன்னேறியவா்களாக இருக்கிறாா்கள். அவா்கள் இதனை எளிதில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பதிவு செய்த வாக்காளா்கள் திங்கள்கிழமை முதலும், மற்ற வாக்காளா்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதலும் இந்த மின்னணு வாக்காளா் அட்டை பெற முடியும். வோட்டா் ஹெல்ப்லைன் எனப்படும் செல்லிடப்பேசி செயலி, தோ்தல் ஆணையத்தின் வோட்டா் போா்ட்டல் இணையதளத்திலும் இந்த டிஜிட்டல் வாக்காளா் அட்டை கிடைக்கும். ஏற்கெனவே ஆதாா் அட்டை, பான் காா்டு, ஓட்டுநா் உரிமம் ஆகியவை மின்னணு முறையில் கிடைத்து வருகிறது. இப்போது அந்த பட்டியலில் வாக்காளா் அட்டையும் இணைந்துள்ளது.

கடந்த 1993-ஆம் ஆண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அட்டை வழங்கப்பட்டது. அது தனிநபா்கள் அடையாள மற்றும் முகவரி சான்றாகவும் பல்வேறு இடங்களில் ஏற்கப்படுகிறது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையம் நிறுவப்பட்டது. அன்றைய தினத்தில் மின்னணு வாக்காளா் அட்டை திட்டமும் தொடங்கப்படுகிறது. ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory