» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கர்நாடகத்தில் அரசுப் பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைப்பு: 14பேர் கைது
ஞாயிறு 24, ஜனவரி 2021 8:04:03 PM (IST)
கர்நாடகத்தில் அரசுப் பணியாளர் தேர்வுக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 14பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் முதல் பிரிவு உதவியாளருக்கான அரசுப் பணியாளர் தேர்வு இன்று (ஜன. 24) நடைபெற இருந்தது. எனினும் தேர்வுக்கான வினாத்தாள் ஏற்கெனவே வெளியான தகவலை அறிந்து தேர்வுகளை அரசு பணியாளர் தேர்வாணையம் ஒத்திவைத்துள்ளது. இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வினாத்தாள்களையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வரி வசூல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் 2030க்குள் 23 நீர்வழிப் பாதைகள் செயல்படுத்த இலக்கு: பிரதமர் மோடி அறிவிப்பு
செவ்வாய் 2, மார்ச் 2021 5:41:31 PM (IST)

புதிய கட்சியை பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 7 நாட்களாக குறைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
செவ்வாய் 2, மார்ச் 2021 5:25:15 PM (IST)

பிரதமர் மோடிக்கு குலாம் நபி ஆசாத் பாராட்டு: காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி!!
செவ்வாய் 2, மார்ச் 2021 11:50:38 AM (IST)

பிரதமர் நரேந்திர மோடிக்கு கரோனா தடுப்பூசி
திங்கள் 1, மார்ச் 2021 11:00:48 AM (IST)

பி.எஸ்.எல்.வி. சி-51 விண்ணில் பாய்ந்தது : இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரேசில் அமைச்சர் புகழாரம்
திங்கள் 1, மார்ச் 2021 10:39:31 AM (IST)

உலகின் மிக தொன்மையான தமிழை சரியாக கற்க முடியவில்லை: பிரதமர் நரேந்திர மோடி உரை!!
ஞாயிறு 28, பிப்ரவரி 2021 5:54:52 PM (IST)
