» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரள சபாநாயகரை பதவிநீக்கும் தீர்மானம் நிராகரிப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

வியாழன் 21, ஜனவரி 2021 5:28:11 PM (IST)கேரள சபாநாயகரை பதவிநீக்கும்  தீர்மானம் நிராகரிக்கப்பட்டதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். 

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  எம்எல்ஏ உமர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன்பின்னர் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. பாஜக எம்எல்ஏ ராஜகோபால் உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்தனர்.

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் என்பதால், விவாதத்தின்போது துணை சபாநாயகர் அவையை வழிநடத்தினார். சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், துணை சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து விவாதத்தை கவனித்தார். விவாதத்திற்கு பிறகு சபாநாயகர் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசினார். அவர் பேசி முடித்ததும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் மெஜாரிட்டி இல்லாத நிலையில், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Thalir Products


Black Forest Cakes


Thoothukudi Business Directory