» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

வியாழன் 21, ஜனவரி 2021 11:49:23 AM (IST)அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதற்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளவர், இந்திய, அமெரிக்க உறவை பைடனுடன் சேர்ந்து வலுப்படுத்த தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவான சவால்களை எதிர்கொள்வதிலும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவதிலும் ஒற்றுமையாக பணியாற்ற தனது வாழ்த்துகளை மோடி கூறியுள்ளார். இந்திய, அமெரிக்க நட்பு பன்முகத்தன்மை கொண்டது என்று குறிப்பிட்டுள்ள மோடி, இரு நாட்டு உறவுகளை இன்னும் அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல பைடனுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam PasumaiyagamThalir Products
Thoothukudi Business Directory