» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விவசாயிகளின் போராட்டத்தின் அடிப்படையே பிரதமர் மோடிக்கு புரியவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதன் 20, ஜனவரி 2021 11:50:06 AM (IST)

"விவசாயிகளின்  போராட்டத்தின் அடிப்படையே பிரதமர் மோடிக்கு புரியவில்லை" என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

டெல்லியில் வேளாண் சட்டங்கள் குறித்த புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய ராகுல் காந்தி,  "இது டிரம்ப்பின் சர்க்கார்" என்று கூறியிருந்த பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்க "கேபிடல்" வன்முறை குறித்து, "வாஷிங்டனில் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளைக் கண்டு வருத்தம் அடைந்தேன். அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடக்க வேண்டும். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறைகளைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது" என்று கூறியிருந்தார்.

மேலும், அமெரிக்க வன்முறையை அடுத்து தில்லியில் விவசாயிகளின் போராட்டம் அமைதி கண்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளது அவருக்கு அடிப்படை புரிதல் இல்லாததைக் காட்டுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குலைக்கும் வகையில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. மேலும் தில்லியில் விவசாயிகளின் போராட்டத்தையும் அவமதித்து வருகிறது. பிரதமர் மோடியைக் கண்டு எனக்கு பயமில்லை. விவசாயிகளின் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பேன்.  விவசாயிகளின் போராட்டத்தின் மூலம் நாடு மிகப்பெரிய பேரிடரை எதிர்கொள்கிறது. ஆனால், மத்திய அரசு இதனை மறைக்க முற்படுகிறது. மக்களுக்குத் தவறான தகவல்களை அளிக்கிறது. விவசாயிகளின் பிரச்னை என்பது பேரிடரின்  ஒரு பகுதிதான். இதுபோன்று நாட்டில் வெளிவராத பல்வேறு பிரச்னைகள் உள்ளன" என்று பேசியுள்ளா


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products
Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory