» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா உறுதி

சனி 24, அக்டோபர் 2020 3:57:07 PM (IST)

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தேவேந்திர ஃபட்னவீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கரோனா பொதுமுடக்கம் தொடங்கிய நாள் முதல் நாள் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தற்போது கடவுளே என்னை ஓய்வு எடுக்கச் சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.

எனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மருந்து மற்றும் சிகிச்சையை எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் பொறுப்பாளராக, மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை பாஜக நியமித்துள்ளது. தற்போது பிகார் தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes




Anbu Communications





Thoothukudi Business Directory