» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எஸ்.பி.பி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

வெள்ளி 25, செப்டம்பர் 2020 4:16:45 PM (IST)

இந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது என ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 51 நாட்களாக பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்று பிற்பகல் மரணம் அடைந்தார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில், "

 உடல்நிலை மீண்டும் திடீரென்று நேற்று மோசம் அடைந்தது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நலம் பெற்று மீண்டு வருவார் என ரசிகர்கள், திரையுலகினர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், பேரிடியாக அவரது மறைவு செய்தி வந்தது. இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி பாலசுப்பிரமணியம் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு செய்தி, அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலசுப்பிரமணியம் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " ஸ்.பி.பி.-ஐ இழந்ததன் மூலம் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது. பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் அடங்கிவிட்டது. குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார். மெல்லிசை குரல் மூலம் என்றென்றும் நம் நினைவுகளில் நிறைந்திருப்பார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads





Anbu Communications


Black Forest Cakes



Thoothukudi Business Directory