» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரிசர்வ் வங்கியின் 7.75 சதவீத பத்திரங்கள் நிறுத்தம்‍: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

வெள்ளி 29, மே 2020 11:50:57 AM (IST)

ரிசர்வ் வங்கியின் 7.75 சதவீத பத்திரங்களை மத்திய அரசு திடீரென்று நிறுத்தியதற்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ரிசர்வ் வங்கியின் 7.75 சதவீத பத்திரங்களை மத்திய அரசு திடீரென்று நிறுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒவ்வொரு அரசாங்கமும் தனது குடிமக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு பாதுகாப்பான, ஆபத்து இல்லாத முதலீட்டு விருப்ப உரிமையை வழங்க கடமைப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் பத்திரம் அத்தகைய சாதனமாக இருந்து வந்தது.

பொது வைப்பு நிதி (PPF), சிறு சேமிப்பு ஆகியவற்றின் வட்டியை அரசு குறைத்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி பத்திரங்களை ஒழித்துவிட்டது. இது நடுத்தர மக்களின் மீது விழுந்துள்ள இன்னொரு பலத்த அடி.2018 ஜனவரியில் இதைச் செய்தார்கள். நான் கண்டனம் தெரிவித்தேன். மறுநாளே அரசு தன் நடவடிக்கையை விலக்கிக் கொண்டது. இப்பொழுது மீண்டும் ரத்து செய்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும். சமூக வலைத்தலங்களில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள். இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory