» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சனி 23, மே 2020 8:22:29 AM (IST)

வீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்து உள்ளார். மேலும் வீட்டுக்கடனுக்கான வட்டியும் குறைகிறது.

கடந்த மார்ச் 27-ம் தேதி ரெப்போ ரெட் விகிதத்தை 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகக் குறைத்து அறிவித்த நிலையில் அடுத்த இரு மாதங்களில் மீண்டும் 40 புள்ளிகளைக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. இந்த வட்டிக்குறைப்பின் மூலம் வங்கிகளில் வீட்டுக்கடன் பெற்றவர்கள், வாகனக்கடன் பெற்றவர்கள், தொழிலுக்காக கடன் பெற்றவர்கள் மாதந்தோறும் செலுத்தும் தவணைக்கான வட்டி பெருமளவு குறையும். கடந்த இரு மாதங்களில் ஏறக்குறைய. 1.15 சதவீதம் வட்டியைக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனாவால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் தொழில்முடக்கம், நிறுவனங்கள் மூடல் போன்றவற்றால் வருமானமில்லாமல் மக்கள் இருப்தால் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணை செலுத்தும் காலத்தை மார்ச் முதல் மே வரை செலுத்த தேவையில்லை என கடந்த மார்ச் 27-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவி்த்தது. அதேபோல இந்த முறையும் கடனுக்கான தவணையை செலுத்தும் காலத்தை கூடுதலாக 3 மாதங்கள் அதாவது, ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் அறிவித்தார். இதன் மூலம் கடனுக்கான தவணை செலுத்தும் அவகாசம் 6 மாதங்களாக கடந்த மார்ச் மாதம் முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கான ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் இனிவரும் காலங்களில் மக்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது அதிகரிக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory