» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்கு வங்கத்தில் அம்பன் புயலுக்கு 72 பேர் பலி: முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

வியாழன் 21, மே 2020 5:29:56 PM (IST)



அம்பன் புயலுக்கு மேற்கு வங்கத்தில் 72 பேர் பலியாகி உள்ளனர் என முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கடந்த 21 வருடங்களுக்கு பின்பு சூப்பர் சூறாவளியாக தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் பின்னர் வலுவிழந்து புயலாக, நேற்று மதியம் 2.30 மணியளவில் மேற்கு வங்கத்தின் திகா கடற்கரை மற்றும் வங்கதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது.  இதனால் மேற்கு வங்கத்திலும், ஒடிசாவிலும் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இரு மாநிலங்களிலும் கடலோர பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் வசிக்கும் மக்கள் சுமார் 6 லட்சத்து 58 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். எனினும், அம்பன் புயலுக்கு 72 பேர் வரை பலியாகி உள்ளனர் என முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.  இவர்களில், கொல்கத்தா நகரில் 17 பேர் பலியாகி உள்ளனர்.  இவர்கள் அனைவரும், மரங்கள் முறிந்து விழுந்ததில், வீடுகள் இடிந்து விழுந்ததில் மற்றும் மின்சாரம் பாய்ந்து பலியாகி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications




Black Forest Cakes






Thoothukudi Business Directory