» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களை ஏன் கைது செய்யவில்லை? டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி

புதன் 26, பிப்ரவரி 2020 5:19:57 PM (IST)டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களை கைது செய்யாதது ஏன்? என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

டெல்லியில்  குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக மாறியது. மூன்று நாட்களாக  நடந்த இந்த வன்முறையால் டெல்லியில் கடந்த சில நாட்களாக பதற்றமான  சூழல் நிலவி வருகிறது. வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி வன்முறை குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.  விசாரணையின் போது டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களை கைது செய்யாதது ஏன்? உயர்நீதிமன்றம்  கேள்வி எழுப்பியது. 

விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது: 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்தது போல் மீண்டும் ஒரு சம்பவத்தை உருவாக்கி விடக்கூடாது. பன் முகத்தன்மை கொண்ட நாட்டில் இதுபோன்ற வன்முறையை மீண்டும் அனுமதிக்கக்கூடாது. நாம் அனைவரும் மிகவும் கவனத்துடன் செயலற்ற வேண்டும். டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களை கைது செய்யாதது ஏன்? வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு டெல்லி முதல்வர், துணை முதல்வர் செல்ல வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்; மக்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்களுக்கு உறுதி அளிக்க வேண்டும் என கூறினர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிக்கு ஹெல்ப்லைன் அமைக்கவும், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக அனுப்ப தனியார் ஆம்புலன்ஸ்கள் வழங்கவும் உயர்நீதிமன்றம்  அறிவுறுத்தி உள்ளது. அடிப்படை வசதிகளுடன் மறுவாழ்வுக்கான முகாம்களை அமைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.  வடகிழக்கு டெல்லியில் கண்டெடுக்கப்பட்ட உளவுபிரிவு அதிகாரி உடல் குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இது "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று நீதிமன்றம் கூறியது. பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்குமாறு மாநில மற்றும் மத்திய அரசின் மிக உயர்ந்த அதிகாரிகளை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Anbu CommunicationsThoothukudi Business Directory