» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

புதன் 26, பிப்ரவரி 2020 3:48:21 PM (IST)

டெல்லியில்  இயல்புநிலையை விரைவில் மீட்டெடுக்க மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக இன்று அதிகரித்துள்ளது, 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. போலீஸ் மற்றும் இதர பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து அமைதி மற்றும் இயல்பு நிலையை உறுதிபடுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அமைதியும், சமூக நல்லிணக்கமும் நமது நெறிமுறைகளில் மையமானவையாகும். அமைதியையும், சகோதரத்துவத்தையும் பேணுமாறு டெல்லியில் உள்ள எனது சகோதர, சகோதரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்தச் சூழலிில் அமைதி காப்பது முக்கியமாகும். அப்போதுதான் இயல்புநிலையை விரைவில் மீட்டெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory