» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி வன்முறை ஏற்கனவே திட்டமிடப்பட்ட அரசியல் சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

புதன் 26, பிப்ரவரி 2020 3:37:38 PM (IST)

"டெல்லி வன்முறை ஒரு அரசியல் சூழ்ச்சி. இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று" என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். 
 
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி வதேரா, ப.சிதம்பரம், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளதால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் சோனியா காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது: டெல்லி வன்முறை கவலையளிக்கிறது, இது ஒரு அரசியல் சூழ்ச்சி. டெல்லி தேர்தலுக்கு பிறகு வேண்டுமென்றே இதுபோன்ற சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். டெல்லியில் நடந்த வன்முறை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லி வன்முறைக்கு மத்திய அரசும், உள்துறையும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். மக்களிடையே வெறுப்பை தூண்டும் வகையில் பா.ஜனதா தலைவர் பேசி வருகின்றனர் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications
Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory