» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் அமைதியை நிலைநாட்ட ராணுவம்? அமித் ஷா சந்திப்புக்கு பின் கேஜரிவால் பேட்டி

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 5:33:57 PM (IST)டெல்லியில் அமைதியை நிலைநாட்ட தேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாகியதில், போலீஸ் தலைமைக் காவலர் ஒருவர் உள்பட 9பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இந்த நிலையில், சட்டம், ஒழுங்கு பிரச்னை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஆளுநர் அனில் பைஜல், காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக், காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா மற்றும் பாஜக தலைவர்கள் மனோஜ் திவாரி, ராம்பிர் சிங் பிதூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கேஜரிவால் கூறுகையில், டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் எல்லோரது ஒருமித்த கருத்தாக இருந்தது. மத்திய அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. 

டெல்லியில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. வன்முறையை கட்டுப்படுத்த போதுமான அளவு டெல்லி போலீசார் உள்ளனர், அவர்கள் நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர். மேலும் அதிகளவிலான போலீசார் வன்முறைத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார். ஒருவேளை தேவைப்பட்டால் மட்டும் ராணுவம் வரவழைக்கப்படும் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest Cakes

Thoothukudi Business Directory