» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 5:28:01 PM (IST)வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த 23-ம் தேதி  ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பினரும் கற்களால் தாக்கிக்கொண்டனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். இதனால் பெரும் பதற்றமான சூழல் காணப்பட்டது. 

இதனால் போலீஸார் தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இன்று காலையும் மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர்.இந்தக் கலவரத்தில் தலைமைக் காவலர் உள்ளிட்ட 7 பேர் பலியானார்கள்,48 போலீசார், பொதுமக்களில் 98 பேர் காயமடைந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வடகிழக்கு டெல்லியில் நிலவும் பதற்றம் காரணமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. 

மேலும், வடகிழக்கு மாவட்டத்தில் வரும் மார்ச் மாதம் 24-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீசார் உத்தரவிட்டனர். இந்நிலையில்  டெல்லி மருத்துவமனையின் கண்காணிப்பாளர்  சுனில்குமார் கூறுகையில்,  டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காவலர் உட்பட 9 பேர் உயிரிந்துள்ளனர் என்றார்.  குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு  ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே  தொடர்ந்து 3-வது நாளாக மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை  நிலவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory