» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு: மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்!!

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 3:56:56 PM (IST)

காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் நேற்று முதல் திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் கல்வி பயில வந்தனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பட்டின் கீழ் கொண்டுவந்தது. இந்த நடவடிக்கையின் போது அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இணையதளம் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும், ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டுவந்த அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. 

இதற்கிடையில் நிலைமை தற்போது சீரடைந்துள்ளதையடுத்து மூடப்பட்ட பள்ளிகளை பள்ளிகளை திறக்க யூனியன்பிரதேச நிர்வாகம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்கான தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் முன்வராததாலும், குளிர்கால விடுமுறை காரணமாகவும் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் காஷ்மீரில் திங்கட்கிழமை (நேற்று) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என யூனியன் பிரதேச கல்வித்துறை இயக்குனர் முகம்மது யானூஸ் மாலிக் தெரிவித்தார். 

பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பெற்றோர் தங்கள் குழந்தைகளை எந்தவித தயக்கமும் இன்றி பள்ளிகளுக்கு அனுப்பலாம் என அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து 7 மாதங்களுக்கு பிறகு நேற்று காஷ்மீரில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். மாணவ-மாணவிகளும் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வந்தனர். 7 மாதங்களுக்கு பின்னர் தங்கள் பள்ளிகளுக்கு வந்த குழந்தைகள் கல்வி கற்றும் தங்கள் சக வகுப்பு நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியடைந்தனர்.   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory