» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவா பாடப்புத்தகங்களில் சத்ரபதி சிவாஜிக்கு நேர்ந்த அவமானம்: ஹிந்து அமைப்பு கண்டனம்

வியாழன் 20, பிப்ரவரி 2020 7:33:04 PM (IST)

கோவா மாநில பாடப்புத்தகங்களில் மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து வெளிவந்துள்ள தகவல்களுக்கு அங்குள்ள ஹிந்து அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவா மாநில கல்வித்துறை சார்பாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கோவா மாநில வரலாறு என்னும் பாடப்புத்தக இணைப்பில் மன்னர் சிவாஜி கோவாவில் உள்ள பர்தேஷ் கோட்டையை மூன்று நாட்கள் முற்றுகை இட்டதாவும், அப்போது அவர் கிராமங்களை கொள்ளையடித்து அவற்றிற்கு நெருப்பு வைத்ததாகவும் , அங்குள்ள பெண்கள் மற்றும் குழநதைகளை தீயிலிட்டு கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அங்குள்ள ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹிந்து ஜனாஜக்ருதி சமிதி என்னும் அமைப்பு இந்த விவகாரத்தில் கோவா மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மனோஜ் சோலங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது தாய்நாட்டைச் சேர்ந்த சிவாஜி போன்ற மகத்தான மன்னர்களைக் குறித்த இத்தகைய திரிக்கப்பட்ட வரலாறுகளை எந்த ஒரு ஹிந்துவும் சகித்துக் கொள்ள முடியாது. கோவா மாநில அரசு அந்த வரலாற்றுப் புத்தகத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications
Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory