» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி கொண்டு வந்ததுதான் : சுப்பிரமணிய சாமி கருத்து

வியாழன் 20, பிப்ரவரி 2020 5:09:50 PM (IST)

21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி கொண்டு வந்ததுதான்  என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்து உள்ளார்.

தெலுங்கானாவில் உள்ள பிரக்னா பாரதி என்ற அமைப்பின் சார்பில் ஹைதராபாத்தில் இந்தியா - 2030 க்குள் ஒரு பொருளாதார வல்லரசு  என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று  நடைபெற்றது. இதில் பங்கேற்ற, பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி, பேசியதாவது: முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் ஆட்சிக்கு பின்னர் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8 சதவீதமாக உயர்ந்தது. சீர்திருத்தங்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்தியா தற்போது தேவைப்பற்றாக்குறையால் திண்டாடுகிறது. மக்கள் கையில் செலவு செய்ய பணமில்லை.

அடுத்த 10 ஆண்டுக்கு பொருளாதார வளர்ச்சி 10 சதவீதம் இருந்தால்தான் இந்தியா 2030ம் ஆண்டில் பொருளாதாரத்தில் வல்லரசாக முடியும். இப்போது இருப்பது போன்ற வளர்ச்சியில் சென்றால், 50 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அமெரிக்கா, சீனாவுக்கு நம்மால் சவால் கொடுக்க முடியும். வருமானவரி மூலம் முதலீட்டாளர்களை நெருக்கடிக்கு ஆளாக்க கூடாது. 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டியை கொண்டு வந்தது தான். இதில் நிறைய குழப்பங்கள் உள்ளன. இவ்வாறு, கருத்தரங்கு நிகழ்ச்சியில்  சுப்பிரமணிய சாமி  பேசினார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி குறித்து பாஜக மூத்த தலைவரே இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTDAnbu CommunicationsThoothukudi Business Directory