» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பொருளாதார மந்தநிலையை ஒப்புக்காள்ளாலாத அரசால் நாட்டுக்கு நல்லதல்ல : மன்மோகன் சிங்

வியாழன் 20, பிப்ரவரி 2020 3:33:31 PM (IST)

பொருளாதாரம் மந்தநிலையை ஒப்புக் கொள்ளாத அரசால் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பொருளாதார நிபுணரும், திட்ட கமிஷன் முன்னாள் துணைத் தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியாவின் "பேக்ஸ்டேஜ்"  என்ற புத்தக அறிமுக விழாவில் புத்தகத்தை அறிமுகப்படுத்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:- உண்மையான ஆபத்து என்னவென்றால் பொருளாதார பிரச்சினைகள் அங்கீகரிக்கப்படாவிட்டால், சரியான நடவடிக்கை எடுக்க நம்பகமான பதில்களைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை.

நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை நீங்கள் அடையாளம் காணவில்லை  எனில், சரியான நடவடிக்கை எடுக்க நம்பகமான பதில்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. இந்த பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் இன்று ஒரு அரசு மந்தநிலை போன்ற ஒரு சொல் இருப்பதைக்கூட ஒப்புக் கொள்ளவில்லை. இது நம் நாட்டுக்கு நல்லதல்ல. பொருளாதாரம்  மந்தநிலை என்பதை ஒப்புக் கொள்ளாத அரசால் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது என்று நான் நினைக்கிறேன் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes





Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications



Thoothukudi Business Directory