» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏப்ரல் 1 ம் தேதி முதல் இந்தியாவில் தூய்மையான பெட்ரோல், டீசல் விற்பனை

புதன் 19, பிப்ரவரி 2020 8:08:08 PM (IST)

அசுத்தமான எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் தூய்மையான பெட்ரோல், டீசல் விற்பனை இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் யூரோ-4 கிரேடு ரக பெட்ரோல், டீசல் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்திவிட்டு, தூய்மையான யூரோ-6 ரக பெட்ரோல் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.தற்போது உலகில் குறிப்பிட்ட சில வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமே இந்த வகை பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது.இதன் மூலம், வாகனத்தை இயக்கும் போது வெளியாகும் புகையில் இருக்கும் நச்சுகள் பெரும் அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory