» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எந்த ஒரு மாநிலமும் நிராகரிக்க முடியாது: கபில் சிபல்

ஞாயிறு 19, ஜனவரி 2020 8:59:46 AM (IST)

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என எந்தவொரு மாநிலமும் நிராகரிக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெற வலியுறுத்தி முதன்முதலாக கேரள சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டப்பேரவையிலும் சிஏஏவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேசமயம் கேரளம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் சிஏஏ மட்டுமல்லாது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான கபில் சிபல் கேரள இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "சிஏஏ நிறைவேற்றப்பட்டுவிட்டால், அதை என்னால் அமல்படுத்த முடியாது என எந்தவொரு மாநிலமும் சொல்ல முடியாது. அது சாத்தியமல்ல. அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. நீங்கள் அதை எதிர்க்கலாம், சட்டப்பேரவையில் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றலாம் மற்றும் சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தலாம். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதை நான் அமல்படுத்தமாட்டேன் என்று கூறுவது சிக்கலையும், கூடுதல் சிரமங்களையுமே ஏற்படுத்தும்.  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தைப் பின்பற்ற மாட்டேன் என ஒரு மாநில அரசு கூறுவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி மிகவும் கடினமாகும்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes

Thoothukudi Business Directory