» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

சனி 18, ஜனவரி 2020 5:47:43 PM (IST)

ஷீரடி சாய்பாபா கோவில் நாளை வழக்கம்போல் திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மராட்டியத்தில் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சமீபத்தில் வருகை தந்த முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறும்பொழுது, சாய்பாபா பிறந்தது பர்பானி நகரில் உள்ள பத்ரி என்ற இடம் ஆகும். ஷீரடி அல்ல. அதனால் பத்ரி நகர வளர்ச்சிக்காக ரூ.100 கோடி வழங்கப்படும் என கூறினார். இது ஷீரடி பகுதி மக்களிடையே  கொந்தளிப்பு ஏற்படுத்தியது. அவர்கள் நாளை பந்த் நடைபெறும் என  அறிவித்தனர்.

இதனை அடுத்து, ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி நாளை முதல் மூடப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது என தகவல் வெளியானது. இந்த விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள கிராமவாசிகள் உடனான கூட்டமொன்று இன்று மாலை நடைபெறும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த செய்தியில் உண்மையில்லை என கோவில் நிர்வாகம் விளக்கமளித்து உள்ளது. ஷீரடி சாய்பாபா கோவில் நாளை மூடப்படும் என வெளியான தகவலில் உண்மையில்லை.  

நாளை கோவில் திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கோவிலில் ஆரத்தி வழிபாடு உள்ளிட்ட அனைத்து மத சடங்குகளும் தொடர்ந்து நாளை நடைபெறும். மருத்துவமனைகள் உள்ளிட்ட சேவைகள் வழக்கம்போல் செயல்படும். அதனால் பக்தர்கள் அனைவரும் வருகை தருவதற்கு  தடையில்லை என கோவில் நிர்வாகத்தின் தலைமை செயல் அதிகாரி தீபக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார். எனினும், ஷீரடியில் நாளை உணவு விடுதிகள், ஓட்டல்கள், தர்மசாலைகள் போன்றவை மூடப்பட்டு இருக்கும் என தகவல் வெளிவந்துள்ளது.  இதனால் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட கூடும் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory