» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாலியல் பலாத்காரத்தின் தலைநகராக உத்தர பிரதேசம் மாறிவருகிறது: காங்கிரஸ் விமர்சனம்

ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:44:58 AM (IST)

பாலியல் பலாத்காரத்தின் தலைநகராக உத்தரபிரதேச மாநிலம்  மாறிக்கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த 2018 டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் அந்த பெண்ணை கடத்திச் சென்று மானபங்கம் படுத்தும் செயலில் ஈடுபட்டனர். அந்த வழக்கு விசாரணைக்காக, நேற்று முன்தினம், இளம்பெண் தன் வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில், சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் அவரை வழிமறித்து அப்பெண்ணை தீ வைத்து எரித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அப்பெண், டில்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தில் பெண் மீது தீ வைத்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சி, மாநில பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிரினாத் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”உத்தரபிரதேச மாநிலத்தில் சட்ட ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது. மாநில பாஜக அரசுதான் உன்னாவ் வழக்குக்கு முழு பொறுப்பு ஏற்கவேண்டும்’’ ‘‘இந்த விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும். நாட்டில், உத்தரபிரதேச மாநிலம், பாலியல் பலாத்காரத்தின் தலைநகராக மாறிக்கொண்டிருக்கிறது. மாநில அரசு விழித்தெழவேண்டும்” என்று சுப்ரியா ஷிரினாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory