» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண்களை பாதுகாக்க இயலாத ஆதித்யநாத் அரசு நீக்கப்படவேண்டும்: அகிலேஷ் யாதவ் தர்ணா
சனி 7, டிசம்பர் 2019 4:26:07 PM (IST)

பெண்களை பாதுகாக்க இயலாத உத்தரபிரதேச பாஜக அரசு நீக்கப்படவேண்டும் என்று வலியறுத்தி சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தர்ணாவில் ஈடுபட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த 2018 டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் கடத்திச் சென்று இந்த அந்த பெண்ணை மானபங்கம் படுத்தும் செயலில் ஈடுபட்டனர். அந்த வழக்கு விசாரணைக்காக, நேற்று முன்தினம், இளம்பெண் தன் வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில், சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் அவரை வழிமறித்து அப்பெண்ணை தீ வைத்து எரித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அப்பெண், டில்லி மருத்துவமனையில் நேற்றிரவு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பெண் மீது தீ வைத்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை முன்வைத்து உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், மாநில சட்டமன்றத்திற்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அந்த தர்ணாவில் கட்சியின் மூத்த தலைவர்களும் உடனிருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அகிலேஷ் யாதவ்,”இன்று ஒரு கருப்பு நாள். நம் நாட்டில் தங்கள் உயிர்களை இழந்த புதல்விகளை நினைவுகூரும் வகையில், அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் இரங்கல் கூட்டங்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும்,”அந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு நீங்கள் என்ன உதவியை வழங்கினீர்கள்?. இந்த மாநில பாஜக அரசு, வெறும் துக்கத்தை கொடுப்பது, சிரமங்களை உருவாக்குவது ஆகியவற்றை மட்டுமே செய்து வருகிறது. மாநில பாஜக அரசு, நீக்கப்படவேண்டும்.
இது இந்த அரசுக்கு முதல் சம்பவம் அல்ல, இது முதல் வழக்கும் அல்ல. ஒரு நாள், தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று உத்தரபிரதேச முதல்வர் இல்லத்தின் வெளியே தீக்குளிக்க ஒரு பெண் முயன்றார். அதை நினைவுபடுத்திப்பாருங்கள். அந்த உன்னாவ் மகள் தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டாள். அதற்கு பாஜக அரசே முழு காரணம். இன்று உயிரிழந்த பெண்ணுக்கு மாநில பாஜக அரசுதான் முழு பொறுப்பு” என்று சாடினார்.
மாநில மக்களுக்காக எங்கள் கட்சி என்றும் துணை நிற்கும். உயிர்நீத்த மகள்களின் கவுரவத்திற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நீதி வேண்டும் என்று கோரி இருந்த மகளுக்கு நீதி கிடைக்கவில்லை. அவரை நம்மால் காப்பாற்ற முடியவில்லை. இது ஒரு கருப்பு நாள்” என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து: 5 பேர் பலி
வெள்ளி 22, ஜனவரி 2021 9:19:12 AM (IST)

கேரள சபாநாயகரை பதவிநீக்கும் தீர்மானம் நிராகரிப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
வியாழன் 21, ஜனவரி 2021 5:28:11 PM (IST)

பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநரே முடிவு எடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 3:31:36 PM (IST)

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
வியாழன் 21, ஜனவரி 2021 11:49:23 AM (IST)

விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
புதன் 20, ஜனவரி 2021 5:29:20 PM (IST)

மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு தொடர வேண்டும் : பிரதமரிடம் கார்டினல்கள் கோரிக்கை
புதன் 20, ஜனவரி 2021 12:06:20 PM (IST)
