» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு இந்தியா தலைநகராகிவிட்டது - ராகுல் விமர்சனம்

சனி 7, டிசம்பர் 2019 3:50:41 PM (IST)

"பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நடப்பதில் உலகின் தலைநகராக இந்தியா உருவாகி விட்டது" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி சுல்தான் பதேரி பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:- நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது கண்டனத்திற்குரியது.  பெண்கள் பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு பாலியல் தொல்லை போன்ற செய்திகள் தினமும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. 

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நடப்பதில் உலகின் தலைநகராக இந்தியா உருவாகி விட்டது. தனது சொந்த மகளையும், சகோதரியையும் காப்பாற்ற முடியாத நிலை இந்தியாவில் ஏன் நீடிக்கிறது என உலக நாடுகள் கேள்வி எழுப்புகின்றன. உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த புகாருக்கு ஆளானார். ஆனால் அதுபற்றி பிரதமர் மோடி ஒருமுறை கூட வாய்திறக்கவில்லை.

மேலும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதுடன், அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வும் அதிகரித்துள்ளது.  சட்டம், ஒழுங்கை மக்கள் கையில் எடுத்து கொள்வதால், நமது அடிப்படை கட்டமைப்புகள் உடைந்து போகின்றன. இதற்கு காரணம், நாட்டை வழிநடத்துகிறவர் வன்முறையையும், அதிகாரத்தையும் நம்புவதே . நாட்டின் மிகப்பெரிய பலமே பொருளாதாரம் தான். அதுவே இப்போது மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.   இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory