» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெலங்கானா என்கவுன்ட்டர்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை தொடக்கம்
சனி 7, டிசம்பர் 2019 3:37:14 PM (IST)

தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதான நால்வரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் இன்று ஹைதராபாத் வந்தனர்.
முதலில் அவர்கள், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற இடமும், என்கவுன்ட்டரில் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்ட இடமுமான ஷத்நகரின் சடன்பள்ளி கிராமத்தில் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு நடத்துகிறார்கள். சம்பவ இடத்துக்கு வரும் தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள், என்கவுன்ட்டர் எப்படி நடந்தது என்பது பற்றி விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில், என்கவுன்ட்டரில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நான்கு பேரின் உடல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து, உடல்களை ஆய்வு செய்யவிருக்கும் அதிகாரிகள், உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினரையும் சந்தித்துப் பேச உள்ளனர். அதோடு, பெண் மருத்துவர் கடத்தப்பட்ட டொண்டுபள்ளி சுங்கச்சாவடிக்கும் நேரில் வந்து அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து: 5 பேர் பலி
வெள்ளி 22, ஜனவரி 2021 9:19:12 AM (IST)

கேரள சபாநாயகரை பதவிநீக்கும் தீர்மானம் நிராகரிப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
வியாழன் 21, ஜனவரி 2021 5:28:11 PM (IST)

பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநரே முடிவு எடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 3:31:36 PM (IST)

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
வியாழன் 21, ஜனவரி 2021 11:49:23 AM (IST)

விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
புதன் 20, ஜனவரி 2021 5:29:20 PM (IST)

மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு தொடர வேண்டும் : பிரதமரிடம் கார்டினல்கள் கோரிக்கை
புதன் 20, ஜனவரி 2021 12:06:20 PM (IST)
