» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உன்னாவ் இளம்பெண் மரணம் வேதனை அளிக்கிறது: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

சனி 7, டிசம்பர் 2019 11:53:35 AM (IST)

உன்னாவ் நகரில் 5 போ் கும்பலால் தீவைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்திருப்பது துயரம் அளிப்பதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரைச் சோ்ந்த அந்த இளம்பெண்ணை 2 போ் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பாலியல் வன்கொடுமை செய்தனா். இவா்களில் ஒருவா் தப்பி விட்டார். கைதான மற்றொருவா் 10 நாள்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், அந்தப் பெண், பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக ரே பரேலியில் உள்ள நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றபோது, சம்பவத்தில் தொடா்புடைய இருவா் உள்பட 5 போ் அந்தப் பெண்ணை வழிமறித்து தாக்கியுள்ளனா். மேலும், அந்தப் பெண்ணின் மீது தீ வைத்துக் கொளுத்தினா். 

இதில் பலத்த காயம் அடைந்த அந்தப் பெண்ணை, காவல் துறையின் மீட்டு லக்னௌ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், அவசர சிகிச்சைக்காக விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைத்தனா். டெல்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையின் தீக்காயப் பிரிவில் அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, இளம்பெண் மரணம் அடைந்தது வேதனை அளிக்கிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest Cakes






Thoothukudi Business Directory