» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் : உச்ச நீதிமன்றம்

வியாழன் 5, டிசம்பர் 2019 4:07:06 PM (IST)

தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் இன்று மதியம் பதில் மனு தாக்கல் செய்தது.  இதையடுத்து, தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வாா்டு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி திமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மறுவரையறை முடியாத 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் எழுப்பியது. இந்த கேள்விகளுக்கு மதியம் 2 மணிக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக இன்று காலை நடைபெற்ற விசாரணையின் போது, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவையுங்கள் என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. அதாவது, தொகுதி மறுவயைறை செய்யவில்லை என நினைத்தால் 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவையுங்கள் என்று தெரிவித்திருந்தது. இதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேவைப்பட்டால் எங்களால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியும் என்று கூறினர்.

உள்ளாட்சித் தேர்தலை எங்களால் ரத்து செய்ய முடியாது, ஆனால் நிறுத்தி வைக்க முடியும். தேர்தல் விதிகள் முறையாக பின்பற்ற முடியவில்லை என்றால், எங்களால் தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதே சமயம், ஒட்டுமொத்தமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையையே ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், 9 மாவட்டங்களைத் தவிர பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory