» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ப. சிதம்பரம் சிறையில் வைக்கப்பட்டது பழிவாங்கும் செயல்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

புதன் 4, டிசம்பர் 2019 8:29:36 PM (IST)

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் 106 நாள்கள் சிறையில் வைக்கப்பட்டது பழிவாங்கும் மற்றும் வஞ்சகம் நிறைந்த செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்த தில்லி உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், ஆதாரங்களை அழிக்கக் கூடாது என்றும், சாட்சியங்களை அச்சுறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளதாவது, ப. சிதம்பரம் 106 நாள்கள் சிறையில் வைக்கப்பட்டது பழிவாங்கும் மற்றும் வஞ்சகம் நிறைந்த செயலாகும். உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  தான் குற்றமற்றவர் என்பதை அவரால் நிரூபிக்க முடியும் என நான் நம்புகிறேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory