» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய கடற்படை தினம்: குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

புதன் 4, டிசம்பர் 2019 3:47:41 PM (IST)

இந்திய கடற்படை தினம் இன்று கொண்டாடப்பட்டுவரும் நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கடற்படை வீரர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலேயர்களால் கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்டபோதே, வர்த்தக கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு பணிகளுக்காக கடற்படை தொடங்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் ‘”ராயல் இந்தியன் நேவி” என்று அழைக்கப்பட்டு வந்த இந்திய கடற்படை ”இந்தியன் நேவி” என்று மாற்றப்பட்டது. 

மிக நீண்ட கடல் எல்லைகளை கொண்ட இந்தியா, முப்படைகளில் கடற்படையை மிக முக்கிய பாதுகாப்பு படையாக கருதுகிறது. விமானம் தாங்கி போர்க்கப்பல், நவீன நீர்மூழ்கி கப்பல் என பல கப்பல்களை கொண்ட இந்தியா, உலகின் மிக முக்கிய கடற்படையாகவும் விளங்குகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினமாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

குடியரசு தலைவர் வாழ்த்து

இந்த நாளில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடற்படை வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். குடியரசு தலைவர் டுவிட்டரில், ”கடற்படை தினமான இன்று, இந்திய கடற்படையின் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் என அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கடல் எல்லைகள், வர்த்தக வழிகள் ஆகியவற்றை பாதுகாத்து, அவசர காலங்களில் பொதுமக்களுக்கு உதவுகள் ஆகியவற்றிற்காக நீங்கள் அளிக்கும் பங்களிப்பை நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது. நீங்கள் எப்போதும் தண்ணீரை ஆளவேண்டும். ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி டுவிட்டரில்,  ”கடற்படை தினமான இன்று, நம் தைரியம் நிறைந்த கடற்படை வீரர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துவோம். கடற்படை வீர‌ர்களின் மதிப்புமிக்க சேவை மற்றும் தியாகம் ஆகியவற்றால் நமது தேசம் வலிமை நிறைந்த மற்றும் பாதுகாப்புமிக்க நாடாக உருவாகியுள்ளது” என குறிப்பிட்டு, இந்திய கடற்படை வரலாறு குறித்த வீடியோவையும் அத்துடன் பதிவிட்டுள்ளார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory