» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பணமதிப்பு நீக்கம் எனும் தீவிரவாத தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது: ராகுல்காந்தி விமர்சனம்

வெள்ளி 8, நவம்பர் 2019 5:30:23 PM (IST)

இந்திய பொருளாதாரத்தை சிதைத்த பணமதிப்பு நீக்கம் என்கிற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு தொலைக்காட்சியில் நேரடியாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் பண மதிப்பிழப்பு செய்யப்படுவதாக  றிவித்தார். பணமதிப்பு நீக்கம் செய்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் டெல்லியில்  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  இளைஞரணியினர்  ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில்  பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டதன் மூன்றாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது:- இந்திய பொருளாதாரத்தை சிதைத்து பலருடைய உயிரை பலி வாங்கிய பணமதிப்பு நீக்கம் என்கிற  தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. பல உயிர்களை பறித்த இந்த தாக்குதல் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளை காணாமல் போக செய்தது. லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் இன்னும் நீதியின் முன் கொண்டு வரப்படவில்லை என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications
Thoothukudi Business Directory