» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்து மகா சபை தலைவர் சுட்டுக்கொலை: உத்தரபிரதேசத்தில் பதற்றம்

வெள்ளி 18, அக்டோபர் 2019 4:55:06 PM (IST)

உத்தரபிரதேசத்தில் இந்து மகா சபை தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில்  இந்து மகா சபை தலைவர் கமலேஷ் திவாரியின் அலுவலகம் உள்ளது. இங்கு வந்த சில மர்ம நபர்கள் திடீரென அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த கமலேஷ் திவாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். லக்னோவில் இந்து மகா சபை தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Anbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory