» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பாணை வெளியீடு

புதன் 9, அக்டோபர் 2019 5:46:42 PM (IST)

தீபாவளியை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பின் மூலம், மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.16,000 கோடி செலவாகும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அளவுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை என்றும், தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த அறிவிப்பினை செய்துள்ளது என்றும் தெரிவித்தார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டார். இதற்கு முன்பு, மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், அகவிலைப்படி கடந்த பிப்ரவரி மாதம் 3% உயர்த்தப்பட்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory