» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளா உலுக்கிய தொடர் கொலைகள்: கைதான பெண் குறித்து அதிர்ச்சி தகவல்!!

புதன் 9, அக்டோபர் 2019 11:40:46 AM (IST)

கேரளாவை உலுக்கிய தொடர் கொலை வழக்கில், கொலையாளி ஜோலி, மேலும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவையே உலுக்கியிருக்கும் கூடத்தாயி தொடர் கொலை வழக்கு விசாரணையை கண்காணித்து வரும் கோழிக்கோடு எஸ்பி கேஜி சிமோன், இந்த வழக்கு தொடர்பான சில முக்கிய விஷயங்களை வெளியிட்டுள்ளார். கடந்த 14 ஆண்டுகளில் சொத்து மற்றும் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வதற்காக தனது கணவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை அடுத்தடுத்து கொலை செய்த ஜோலி, மேலும் இரண்டு பெண்கள் மற்றும் உறவினர்களைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாமரசேரி கூடுதல் தாசில்தாரின் மகள் ஜெயஸ்ரீ மற்றும் தனது கணவரின் சகோதரி, ஒரு தொழிலதிபர் என அவரது கொலைப் பட்டியலில் இன்னும் சிலரின் பெயர்களும் இருக்கின்றன. உணவில் சயனைடு விஷம் வைத்துக் கொள்வதுதான் ஜோலியின் வழக்கமான ஜோலி. அனைவரையுமே ஒரே முறையில் கொலை செய்திருக்கும் ஜோலி, இரண்டு பெண் குழந்தைகளையும் கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதற்குக் காரணம், அவர்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இவரது சில கொலை முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது. காரணம், இவரைப் பற்றி குடும்பத்தில் பலருக்கும் சந்தேகம் எழுந்ததால், இவரிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருந்துள்ளதே காரணம் என்கிறார்கள். ஆனால் இவரது கொலைகளுக்கும், கொலை செய்யவிருந்த திட்டங்களுக்கும் என்ன நோக்கம் என்று தெரியாமல் காவல்துறையினர் குழம்புகின்றனர். அதில்லாமல், இவர் மீது சந்தேகம் எழுந்தும், யாருமே காவல்நிலையத்தில் புகார் கொடுக்காதது ஏன் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது. 


மக்கள் கருத்து

அருண்Oct 9, 2019 - 10:14:57 PM | Posted IP 223.2*****

மலையாளினு இல்லடா நொன்னைங்களா. காம வெறி பிடித்த பெண் எது வேணாலும் செய்வா.

ராமநாதபூபதிOct 9, 2019 - 05:03:31 PM | Posted IP 162.1*****

மலையாளிகள் மிகவும் சிறுமையான புத்தியுடையவர்கள். மலையாளிகள் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகளின் தனியார் நிறுவனங்களில் முக்கியபதவிகளில் இருந்துகொண்டு இந்தியாவின் பிறமக்களை படாதபாடு படுத்திகொண்டு இருக்கிறார்கள் இன்றும் இது நடந்து கொண்டு இருக்கிறது

இவன்Oct 9, 2019 - 01:15:11 PM | Posted IP 173.2*****

சில மலையாளி நாய்களெல்லாம் ஆபத்தானவர்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications
Thoothukudi Business Directory