» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முதியவர் போல் மாறுவேடமிட்டு நியூயார்க் செல்ல திட்டம்: விமான நிலையத்தில் வாலிபர் சிக்கினார்

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 10:56:19 AM (IST)டெல்லி விமான நிலையத்தில் 81 வயது முதியவரைப்போல வேடமிட்டு நியூயார்க் செல்ல திட்டமிட்ட வாலிபரை, விமான நிலைய அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர். 

அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் படேல்(32). இவர் நியூயார்க் செல்வதற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். இவர் சென்ற விதம்தான் ஆச்சரியத்துக்குரியது. இவர் நியூயார்க் பயணிக்க திட்டமிட்டுள்ளார்.  இதற்காக அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், அம்ரிக் சிங் எனும் 81 வயது முதியவர் பெயரில் பாஸ்போர்ட் ஒன்றை போலியாக ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து தாடி, தலைமுடி என அனைத்தையும் 81 வயது முதியவர் போல தோற்றம் தெரிய வேண்டுமென வெள்ளை நிற டை அடித்துக் கொண்டார். மேலும் வீல் சேரில் வந்துள்ளார். 

இவரது நடத்தையில் ஆரம்பத்தில் இருந்தே அங்கு சிறப்பு பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரை சோதித்தனர். அதில், அவர் 32 வயதுடைய வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அவரது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வயதிற்கு சற்றும் பொருந்தாத வகையில் அவரது தோளின் தன்மை மிகவும் நன்றாக இருந்தது. 50 வயதைக் கூட தாண்டாத தன்மை கொண்டது. மேலும் அவர் ஜீரோ பவர் கொண்ட மூக்கு கண்ணாடி அணிந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டில் குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்’ என கூறியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory