» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சந்திரயான் 2 எடுத்து அனுப்பிய சந்திரனின் முதல் புகைப்படம் - இஸ்ரோ வெளியிட்டது!

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 4:08:03 PM (IST)



சந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ள புகைப்படத்தை இஸ்ரோ நேற்று இரவு வெளியிட்டுள்ளது

நிலவின் தென்துருவப் பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென்துருவ மண்டலத்தில் கால் பதிக்காத நிலையில், இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலனை அனுப்பியுள்ளது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சந்திரயான் 2 முதன்முதலாகப் படம் பிடித்த பூமியின் படத்தை, இஸ்ரோ ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிட்டது. அதன்பின், ஆகஸ்ட் 6ஆம் தேதி, 5ஆவது மற்றும் இறுதி புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி புவிவட்டப் பாதையிலிருந்து சந்திரனின் வட்டப்பாதையை நோக்கி விண்கலத்தை செலுத்தும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் செயல்படுத்தினர். ஆகஸ்ட் 20ஆம் தேதி திட்டமிட்டபடி நிலவில் நீள்வட்ட சுற்றுப் பாதையில் சந்திரயான் 2 நுழைந்ததாக இஸ்ரோ மையத் தலைவர் சிவன் அறிவித்தார்.

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது. ஆர்பிட்டர் நிலவின் 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் இருந்து நிலவைக் கண்காணித்து வரும். செப்டம்பர் 2ஆம் தேதி சந்திரயான் 2இல் இருந்து பிரிந்து வெளியேறும் லேண்டர் விக்ரமும், ரோவர் பிரக்யானும் நிலவின் மேற்பரப்பில் செப்டம்பர் 7ம் தேதி தரையிறங்கும்.

இந்நிலையில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படத்தை இஸ்ரோ நேற்று இரவு வெளியிட்டுள்ளது. சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 2,650 கிமீ உயரத்திலிருந்து கடந்த 21ஆம் தேதி இந்தப் படத்தை சந்திரயான் 2 எடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Anbu Communications


Nalam Pasumaiyagam




Black Forest Cakes



Thoothukudi Business Directory