» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீருக்கு வரத்தாயார் - சுதந்திரமாக நடமாட ஏற்பாடு செய்யுங்கள் - ஆளுநருக்கு ராகுல் பதில்!!

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 5:42:28 PM (IST)

"காஷ்மீருக்கு வரத்தாயாராக உள்ளேன். என்னை சுதந்திரமாக மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்"  என ஆளுநருக்கு ராகுல் பதிலளித்துள்ளார்.
   
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த10-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ’காஷ்மீரில் வன்முறை நடைபெறுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அங்கு என்ன நடக்கிறது என பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலளித்த காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் ’ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய கட்சியின் இளம் தலைவர். அவரிடம் இருந்து மிகவும் முதிர்ச்சியடைந்த அறிக்கையை எதிர்பார்க்கிறேன்.   ராகுல் காந்தியை காஷ்மீருக்கு வந்து பார்வையிடுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். ஜம்மு-காஷ்மீர் அரசுக்க்கு சொந்தமான விமானத்தை டெல்லிக்கு அனுப்புகிறோம். அதில் பயணித்து காஷ்மீருக்கு வாருங்கள்.  இங்கு நிலைமை மிகவும் சீராகத்தான் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்வீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆளுநரின் அழைப்பை ஏற்று காஷ்மீருக்கு வர தயாராக இருப்பதாக ராகுல் காந்தி இன்று தெரிவித்தார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ’நானும் எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவும் உங்களின் (ஆளுநர்) அழைப்பை ஏற்று ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை பார்வையிட வருகிறோம். இதற்காக நீங்கள் எங்களுக்கு விமானம் அனுப்ப வேண்டியதில்லை. ஆனால், அங்கு சுதந்திரமாக பயணம் செய்து மக்களையும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும் நமது ராணுவ வீரர்களையும் நாங்கள் சந்திப்பதை நீங்கள் உறுதிப்படுத்தினால் போதும்’ என குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

சேகர்Aug 16, 2019 - 10:40:50 AM | Posted IP 162.1*****

இது போலியான அழைப்பு ஏமாறாதே

samiAug 13, 2019 - 07:06:28 PM | Posted IP 162.1*****

இங்கயே சும்மா மூடிக்கிட்டு இரு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory