» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் வைகோ - சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு

செவ்வாய் 23, ஜூலை 2019 10:34:22 AM (IST)அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக உள்ள வைகோ - சுப்பிரமணியன் சுவாமி இருவரும் நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென சந்தித்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

கடந்த வாரம் ஹிந்தி ஒரு வளர்ச்சி அடையாத மொழி. ரயில்வே அட்டவணையில் மட்டுமே அது அச்சிடப்பட்டுள்ளது என வைகோ முன்னர் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சு அனைத்து இந்தியர்களுக்கும் அவமானம் ஆகும். அதேபோல், நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள வைகோ, சத்தியப்பிரமாணத்தையும், இந்திய அரசியலமைப்பை மீறியதாகவும், சமஸ்கிருதம் ஒரு வழக்கொழிந்த மொழி எனவும் அதனை கற்பதில் எவ்வித பயனும் இல்லை எனவும் கூறியுள்ளார். 

நாட்டிற்கான அவமானம் என்று வைகோவின் ஆத்திரமூட்டும் கருத்துக்களை மேற்கொள் காட்டிய சுவாமி, மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புக்கு வைகோ தகுதியானவர்தானா என்பதை ஆய்வு செய்ய மாநிலங்களவை ஒழுங்குக் குழுவுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், அவரை "பதவி நீக்கம்" செய்வதற்கான தீர்மானத்தை மாநிலங்களவையில் நிறைவேற்று பொருத்தமானது என்று நான் கருதுகிறேன் என்றும் குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடுவுக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியிருந்தார். 

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தில்லி சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து கூறினார்.  இதுதொடர்பாக வைகோ தனது டுவிட்டர் பக்க பதிவில், நாடாளுமன்ற வளாகத்தில் தன்னை (வைகோ) சந்தித்து வாழ்த்து கூறியதாகவும், இதை நான் எதிர்பார்க்கவில்லை. சுவாமி தனது நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக உள்ள இருவரும் திடீரென சந்தித்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

நிஹாJul 24, 2019 - 09:30:12 AM | Posted IP 173.2*****

எதிரெதிர் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் எப்படி மற்றவர்கள் மீது மரியாதை செலுத்தவேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம்.

குமார்Jul 23, 2019 - 12:38:32 PM | Posted IP 172.6*****

வைகோ அவர்களுக்கு பயம் வந்திருக்கும் எங்கே சாமி நம் MP பதவியை காலிபண்ணிவிடுவாரோ என்று...அதனால் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம்...

இவன்Jul 23, 2019 - 11:38:01 AM | Posted IP 162.1*****

இரண்டுமே நாட்டுக்கு விளங்காத வந்தேறி ஆட்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsBlack Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory