» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உ.பி.யில் கடும் வெப்பத்தால் கொடூரம்: ரயிலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம்?

செவ்வாய் 11, ஜூன் 2019 5:34:10 PM (IST)

உத்தரப்பிரதேசத்தில் கடும் வெப்பம் காரணமாக ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே இயல்பை காட்டிலும் அதிக வெப்பம் நிலவி வருகிறது. ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி, அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் ரெட் அலர்ட் எனப்படும் வெயில் அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்தாண்டு நாட்டிலேயே அதிகபட்ச வெப்பமாக, ராஜஸ்தானில் கடந்த வாரம் 50.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. 

அடுத்த 4 நாட்களுக்கு மத்தியப் பிரதேசம் , ராஜஸ்தான், அரியானாவில் கடும் வெயில் கொளுத்தும் என்று  தெரிவிக்கப்பட்ட நிலையில்,  உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பயணம் மேற்கொண்டனர். ரயிலில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த 5  பேருக்கும் ஓடும் ரயிலில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 4 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். கடும் வெப்பத்தால் அவர்கள் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 

இறந்தவர்கள் விவரம்:  பச்சைய்யா (80) பாலகிருஷ்ண ராமசாமி (69) தனலட்சுமி (74)  சுப்பராய்யா (71). மேலும் தெய்வானை (71) என்பவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள் கோவை பகுதியிலிருந்து சுற்றுலா சென்றவர்கள் என தெரியவந்துள்ளது. ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்களுக்கு ஜான்சி அருகே உடல்நலக்குறைவு ஏற்பட்டது. படுக்கை வசதிகொண்ட சாதாரண பெட்டியில் பயணித்தபோது வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத  பரிசோதனைக்கு பின்னரே உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Anbu Communications






Thoothukudi Business Directory