» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வன்முறை எதிரொலி: மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடிக்க உத்தரவு!!

வியாழன் 16, மே 2019 10:36:29 AM (IST)



அமித்ஷா பேரணியில் வன்முறை, வித்யாசாகர் சிலை உடைப்பு பேனா்ற பிரச்சனைகள் காரணமாக மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரம் முடிவதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரமாண்ட பேரணி நடத்தினார். அப்போது அவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர்.அப்போது திடீரென பேரணி மீது சிலர் கற்களை வீசியதால் வன்முறை ஏற்பட்டது. இதில் வித்யாசாகர் கல்லூரிக்கு வெளியே இருந்த வாகனங்கள் தீவைத்து எரிக் கப்பட்டன. கல்லூரி முன்பு இருந்த தத்துவ மேதை வித்யாசாகர் சிலையும் உடைக்கப்பட்டது. இந்த சிலை உடைப்பு சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சிலை உடைப்புக்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ் தான் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சிலை உடைப்பு வீடியோவை வெளியிட்டு இது பா.ஜனதாவினரின் செயல்தான் என கூறினர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பா.ஜனதாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து தேர்தல் கமிஷனுக்கும் புகார்கள் சென்றன. இந்த மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் வழக்கமாக நாளை (வெள்ளிக் கிழமை) மாலை 6 மணிக்கு முடிவடைய வேண்டும்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் அரசியல்சாசன 324-வது சட்டப்பிரிவின்படி தேர்தல் பிரசாரத்தை ஒரு நாள் முன்னதாகவே நிறுத்த உத்தரவிட்டுள்ளது. 9 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் வியாழக் கிழமை (இன்று) இரவு 10 மணியுடன் முடிகிறது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதோடு கொல்கத்தாவில் நடைபெற்ற வன்முறை காரணமாக மாநில அரசின் உள்துறை முதன்மை செயலாளர், சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. ஆகியோரை அந்த பதவியில் இருந்து விலக்குவதாகவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory