» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மோடி அரசு ரூ.69 ஆயிரம் கோடி முறைகேடு: காங்கிரஸ் புகார்

வியாழன் 17, ஜனவரி 2019 11:01:32 AM (IST)

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.69 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடிக்கு 2ஜி, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு நடந்ததாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதை அப்போது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக்கொண்டு காங்கிரசுக்கு எதிராக ஊழல் புகார்களை தெரிவித்தன. இதையடுத்து மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இது கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலித்ததால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.69 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா செய்தியாளர்களிடம் பேசுகையில்,”பிரதமர் மோடி சமீபத்தில் பேசுகையில், தனது ஆட்சிக்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் கிடையாது என்றார். ஆனால் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பாஜக ஆட்சியில் தேசிய அளவில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

”கடந்த 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இதை மீறும் வகையில், மோடி அரசாங்கம் முதலில் வருபவருக்கு முதல் ஒதுக்கீடு என்ற வகையில் தனியார் நிறுவனத்துக்கு மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரு.560 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் இதற்கு முன் நடைபெற்ற ஒதுக்கீட்டில் தனியார் செல்போன் நிறுவனங்கள் பயனடையும் வகையில் செயல்பட்டதால் பொதுமக்கள் பணம் ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத் தொகை வசூலிப்பது 6 ஆண்டுகளாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்ததால் அரசுக்கு ரூ.23 ஆயிரத்து 821 கோடிக்கு வட்டி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று பவன் கேரா குற்றஞ்சாட்டினார்.


மக்கள் கருத்து

தமிழன்-Jan 17, 2019 - 08:21:15 PM | Posted IP 162.1*****

உனக்கு குடும்பம் இல்லங்கிற.. அப்புறம் எதுக்கு இந்த சோலி..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

CSC Computer EducationNew Shape Tailors

Joseph Marketing

Anbu Communications

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory