» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காதல் பிரிவால் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் : மருத்துவமனையில் திருமணம்

சனி 12, ஜனவரி 2019 6:59:48 PM (IST)

ஹைதராபாத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற காதலர்களுக்கு மருத்துவமனையில் அவர்களது பெற்றோர்களே திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.

ஹைதராபாத்துக்கு அருகில் உள்ள விகராபாத் சேர்ந்தவர் ரேஷ்மா (19). இவருடைய மூத்த சகோதரிக்கு அண்மையில் திருமணம் நடந்தது. இதனிடையே ரேஷ்மாவுக்கும், அக்காள் கணவரின் தம்பி நவாஸ் (21) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவர, இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த ரேஷ்மா பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரேஷ்மாவின் பெற்றோர்கள், உடனே அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவலறிந்த நவாஸின் வீட்டாரும் மருத்துவமனைக்கு வந்தனர். ரேஷ்மாவின் நிலையை பார்த்து மனமுடைந்த நவாஸ்,  பூச்சி மருந்தை மருத்துவர்களுக்கு தெரியாமல் திருடி குடித்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால் நவாஸூம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருவரின் செயல்களைப் பார்த்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவனையில் இருந்தவர்கள், ரேஷ்மா – நவாஸ் பெற்றோர்களை அழைத்து சமாதானம் செய்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும்படி அறிவுறுத்தினர். பின்னர் இரு வீட்டாருக்கும் சம்மதம் ஏற்பட மருத்துவமனையில் வைத்தே ரேஷ்மாவுக்கும் நவாஷ்க்கும் திருமணம் நடந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Anbu Communications

Black Forest Cakes



Thoothukudi Business Directory