» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடந்த 4 ஆண்டுகளாக ஊழலற்ற நிர்வாகத்தை மத்திய பாஜக அரசு தந்துள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்

சனி 12, ஜனவரி 2019 5:16:33 PM (IST)

கடந்த 4 ஆண்டுகளாக ஊழலற்ற நிர்வாகத்தை மத்திய பாஜக அரசு தந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இதுவரை மத்திய பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் என்று எதுவும் இல்லை என்றார்.படேல், முதல் பிரதமராகி இருந்தால் நாட்டின் போக்கே மாறி இருக்கும். மத்திய பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளாக பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளது.

ஊழலற்ற நிர்வாகத்தை மத்திய பாஜக அரசு தந்துள்ளது. நம் தேச வரலாற்றில் முதன்முறையாக இது நடந்தது. எங்களுக்கு முன்னால் உள்ள அரசு நாட்டை இருளுக்கு தள்ளியது. குறிப்பாக, 10 ஆண்டுகள் (2004-2014) மோசடி மற்றும் ஊழலால் இந்தியா தோல்வி அடைந்தது. பாரதீய ஜனதாவின் பலம் தொண்டர்களிடம் தான் உள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். என்று கூறினார்.


மக்கள் கருத்து

இவன்Jan 14, 2019 - 03:29:52 PM | Posted IP 162.1*****

பொய் சொல்லுவதில் முதல் இடம்

TAMILANJan 12, 2019 - 05:49:54 PM | Posted IP 162.1*****

APPADIYA

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

CSC Computer Education


Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory