» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

திங்கள் 19, நவம்பர் 2018 3:58:11 PM (IST)

"சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது" என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது ஜனவரி 22-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்தது. இந்த மனுக்கள் மீது திறந்த நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடத்தவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

சபரிமலை வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டாலும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில், சீராய்வு மனுக்களை விரைந்து விசாரிக்கும்படி மனுதாரர்கள் கூறி வருகின்றனர். அதனை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அவ்வகையில், மனுதாரர் மேத்யூ நெடும்பராவின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. சீராய்வு மனுக்கள் மீது ஜனவரி 22ம் தேதி விசாரிக்கப்படும் எனவும் திட்டவட்டமாக கூறியது. பெண்களை அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த தேவசம்போர்டு அவகாசம் கோர உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
New Shape Tailors


Anbu Communications

Joseph Marketing

CSC Computer Education

Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory